சலாவு 55 கவிதைகள்

உன் வண்ணம் காணா என்னுள் ..
எண்ணச் சிதறல்கள் ஏராளம் ..
காதலித்த பெண்ணே உன்னை ..
காத்திருந்தேன் கை பிடிக்க ..
கண்டதெல்லாம் கனவு தானோ ..
காதல் கானல் நீராய் போன தேனோ ..
வேண்டாம் என்று விட்டு ..
வெகுதூரம் வந்து விட்டேன் ..
பாழாய் போன உன் நினைவு ..
பாடாய் படுத்துகிறது என்னை ..
உன்னை நினைத்து ..
இயங்கிய இதயம் ஒன்று ..
துடிக்க மறந்த நிலை இங்கு ..
இன்று நேற்று நாளை இல்லை ..
உன் சுவாசம் என்னை சேரும் வரை ...
...................
.................................................சலா,

எழுதியவர் : (24-Nov-15, 12:33 am)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 46

மேலே