காதல் ஏக்கம்

உனது மனம் மாறு
எனது மனம் ஆற
உனது வார்த்தை கூறு
எனது வாழ்க்கை வாழ
உன் மௌனத்தை காட்டதே
என் நாட்களை கடத்தாதே
ஊமையாய் நின்று
என்னை
வேடிக்கை பார்க்காதே
என்னுள்
வேதனையை சேர்க்காதே
பார்வை வீசும் நேரம்
வார்த்தை பேசு
"இம்" என்றால்
நம் வாழ்வே சொர்க்கம்
"இல்" என்றால்
உன் நினைவே சொந்தம்.