கஜல் 19
இலக்கணம் இல்லாத இலக்கியம் உண்டு
அழித்திட முடியாத ஓவியம் உண்டு
உனை தினமும் பாடுவேன், தமிழ் என்ற
குறைந்து விடா சொற்களஞ்சியம் உண்டு
உனை நொடி தோறும் இடை விடா தெண்ணி
மகிழ்ந்திட வாழ்வில் இலட்சியம் உண்டு
பகை எனுமோர் தீய நோயினை தீர்க்க
எனக்குள்ளே நட்பென்ற வைத்தியம் உண்டு
துணை என நீ உள்ளதால் எனக்கின்று
திகழ்ச்சி அடைகின்ற பாக்கியம் உண்டு