நிழலானது என் காதல்

மூச்சோடு கலந்த முதல்காதல்
முழுமதியாய் என் மனதில் தேயாது
தொடர்கிறது இன்னும்..
உணர்வுகளை தொட்டு
இதயங்களை வருடி
நினைவுகளில் நின்று வாழ்கிறது..
காதலின் பெயர் சுமக்கும்
ஆயிரம் காதல் உள்ளத்தில் பூத்தாலும்
இதயத்தில் செதுக்கிய சிற்பம் போல் முதல்காதல்..
காதலில் நீயும் நானும் நிஜம் என்றால்
என் முடிவும் உன் முடிவும் என்றோ முடிச்சிடப்பட்டிருக்கும்..
நிஜமென நிஜமாக நான் இருக்க
உனது வெளிச்சத்தில் வந்த நிழல் போல்
நம் காதல் ஆனது...