நிஜமான காதலிது நீ இன்றி வாழாது

உன் நினைவால் ஒழுகிய சொற்கள்
என் கவிதையானது..

உன் கனவுகளால் வாழ்ந்த நாட்கள்
என் சரித்திரமானது..

உன் நயனங்கள் நிசப்தங்கள் நிறைந்த நிதர்சனமாக இருக்க
என்னுள் ஓவியமாய் ஆனது..

உன் குரல் கேட்க ஆயிரம் கேள்விகளை உள்ளம் திரட்டுகிறது
உன் குரலிசையில் அகமகிழ்கிறது ..

நிஜமான காதலிது
நீ இன்றி வாழாது...

எழுதியவர் : பர்ஷான் (24-Nov-15, 5:34 pm)
பார்வை : 103

மேலே