பிச்சையாகவாவது கொடு
உனக்கும் எனக்குமான
இந்த அண்மைய
இணக்கச் சிக்கலில்
சில வார்த்தைகள் அயல் நாடுகளில்
இருளில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன,
சில காற்றில் பறக்கின்றன,
சில வார்த்தைகள் கல்லுக்கடியில்
சிக்கிக் கொண்டுள்ளன,
சில ஆற்றில் மிதந்து செல்கின்றன,
.பொய் மேகங்களால் எனக்கு
காமமோ காதலோ வந்து
அலைக்கழிக்கப்படவில்லை;
காற்று, ஊற்று, காலை, மாலை
எனக்கும் அந்தக் கவிதைச் சொற்கள்
கிடைக்கும் ஆயின் அவற்றை
உனக்காக நான் அர்ப்பணிப்பேன்
நம் வீட்டை உடைத்து விடாதே,
காதல் கூட்டை கலைத்து விடாதே!
அமைதியாய் இரு, உன்னைக்
கெஞ்சிக் கேட்கிறேன் இன்னும்
கொஞ்சம் நாட்களை எனக்கு
பிச்சையாகவாவது கொடு
.