பாசம்

முழங்கி வெடித்த இடியால்
குலுங்கி முறிந்த
பாலைக்கிளை போல்
புயற்காற்றால் அள்ளுண்டு
கண்ணுள் உறுத்தும்
புழுதி போல்
சோவெனப் பெய்த மழையால்
அறுத்தோடி இடிந்த
தார் வீதி போல்
நிராகரிப்பையும் தடுத்து
நீளமாய் நிலைத்து
நீள்கிறது. ...
இந்த பொல்லாத பாசம்

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (28-Nov-15, 4:32 am)
Tanglish : paasam
பார்வை : 318

மேலே