அனுபவம் ~ சகா
சுடும் என்றேன்
சுடுகிறதா என்றான்?
புரியும் என நினைத்தேன்...!!!
புரியாது என்பது
புரிந்து கொண்டேன்...!
சுட்டுவிட்டதா என்றேன்?
புண்ணுடன் இருப்பது
அறிந்து கொண்டேன்...!
சுடும் என்று தெரிந்தும்
வெளிச்சத்திற்க்காய் வாய்த்த
நெருப்பை விட்டது நம் தப்பா...?
இல்லை,
புரிந்தும் புரியாது போல்
புண்பட்டு நிற்பது
அவன் தப்பா...?