என்னை விட்டுப் போகாதே

என்னை விட்டுப் போகாதே
என் உயிர் கொண்டு போகாதே!!

கண்ணுறக்கம் இல்லாது எப்போதும்
என் இராப்பொழுது கரையுதடி!!

எரிமலைப் போல் என் நெஞ்சம்
எப்போதும் உள்ளுக்குள் குமுறுதடி!!

என் இதயத்தில் இடி விழுந்து
வலி விதைத்து தினம் வாட்டுதடி!!

காலம் பல கடந்து விட்டால் காதலும்
பொய்த்திடுமோ என்று என்ன வைத்துவிடாதே!!

கருவறை போல் உன்னை என்னுள்
வைத்து தினம் காத்தேனே!!

உன்னை நினைத்தே வாழும் என்னை
தனியே விட்டுப் போகாதே!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (28-Nov-15, 10:51 pm)
பார்வை : 433

மேலே