மீண்டும் பாலைவனம்

‪#‎மழை_நீரை_சேமிப்போம்‬

மழை அடைமழை
விடாமல் பொழிந்துகொண்டு
மட்டும் இருக்கவில்லை
நம்மோடு பேசிக்கொண்டும் இருக்கின்றது !

ஓ மனிதர்களே !
கொஞ்சம் உங்கள் வீட்டை விட்டு
வெளியே வாருங்கள்

நான் மழை !
உங்களோடு தான் , பேச வந்துள்ளேன்

நான் முத்து மழை
மொத்த மேனி நனைய
தருவேன் முத்த மழை

துரத்தாத என்னை கண்டு
தூரமாய் ஓடி ஒளிவதேனோ ?

உங்களின் எந்த தவமும் கண்டு
நான் இங்கு ஓடி வரவில்லை
உங்களின் தாகம் கண்டே வந்துள்ளேன்

தயக்கமின்றி முழுதாய் என்னை தந்துள்ளேன்
பலவற்றின் பலவருட தாகத்தை தனித்துள்ளேன்
இன்னும் ஒருவருட தாகத்தை தனிக்குமளவு
எங்கும் யாவர்க்கும் பெருமளவு பொழிந்துள்ளேன்

தேடிக்கொண்டு இருந்த ஒருவன் இன்று
கிடைத்த போதும் அவனை ஏரி
குளம் குட்டை ஆறு அணைகளில்
பிடித்து அடைத்து கட்டிப் போடாமல்
மீண்டும் கடலில் சென்று ஒளிந்துகொள்ளும்
வேடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்ப்பதேனோ

மீண்டும் நீங்கள் வாழ விரும்புவது
பாலை நிலத்தில் தானோ ?
மீண்டும் நீங்கள் வாழ விரும்புவது
பாலை நிலத்தில் தானோ ?

#மழை_நீரை_சேமிப்போம்

(செந்தில்குமார் ஜெயக்கொடி)

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (30-Nov-15, 10:08 am)
Tanglish : meendum palaivanam
பார்வை : 163

மேலே