ஓர் இரவில்
ஓர் இரவு முழுவதும்
ஓயாத நட்சத்திர கூட்டங்கள்
ஓய்வு எடுக்க வந்த நிலவுக்கு
வெண்ணிலவு என்று பேர்
கண்ணாமூச்சி காட்டும் மேகங்கள்
கொஞ்ச நேரம் மட்டும்தான்
ஒழித்து வைக்க முடிந்தது வெண்ணிலவை
மரத்தின் விழும்பில் பாய்ந்த
நிலவின் ஒளியில்
இராட்டினம் ஆடும்
பூச்சிகளின் பட்டாளம்
முழுவதும் நனைந்திருந்தும்
குளூர் விட்டது போல்
குறுகி கொண்டு அமர்திருந்த காக்கைகள்
எதோ தொலைந்தது போல்
தேடி தேடி செங்காட்டில் திரிந்த
சென்னரிகளின் கூட்டம்
பனிகளை தள்ளிவிட்டு
புற்களை கோதி கொண்டு
ஓய்யாரம எட்டி பார்க்கிறது முயல்
வேட்டையர்களின் கண்ணில் படாமல் இருக்க
எதையோ விழுங்கி விட்டு
ஓர் அடிகூட நகர முடியாத நிலையில்
கீரிடம் மாட்டிகொண்ட பாம்பு
அங்கும் இங்கும்
கூ கூ வின் குயிகளின் சாரல்
சல சல என ஓடையின் சத்தத்தில்
ஒழிந்துயிருந்த தாமரை மொட்டு
கண்விழிக்க
கொஞ்சம் கொஞ்சமா விழிக்கிறது
சூரியன்
கொஞ்சம் கொஞ்சமா மறைகிறது
நிலவும் நச்சதிரமும்..