காதல் கருவான வேகம் - இர்பான் அஹ்மத்

காதல் -------

விழிமேல் யாரோ நடப்பது போல் உணர்கிறேன்,

இமைகள் உடைத்து
என் இருக்கை பார்க்க
அமர்ந்திருக்கிறாள் அவள் எனதருகே ...

வியர்வை பூத்த நொடியில்
விளிகளருந்தியது -
அவளமுதொழுகும் அழகை மட்டுமே..

உறைந்து கிடக்கிறது உயிர்,
தேங்கி நிற்கிறது என் -
தேகமென்குமவள் காதல்.

நிழல் கொண்டு உரசிக்கொள்கிறேன்
எனைக்கொல்லுமவள்-
நீங்காத உணர்வுகளால்....

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (30-Nov-15, 7:33 pm)
பார்வை : 93

மேலே