விழிகளின் படையெடுப்பு

பெண்னே, உனது விழிகளின் படையெடுப்பால் சிறைப்பட்டவன் நான்.
மன்மதன் தானும் உன் மூலம் தன் மலர் பாணங்களை என் மீது செலுத்தினான்.
அவனது தாக்குதலில் என் இதயக்கதவுகள் திறந்து கொண்டது
நானும் உன் மீது மன்மதன் தன் பாணங்களை திருப்பி செலுத்தினேன்
நீயோ உன் செவ்விதழ் கவசங்களால் அவற்றை தடுத்துக் கொண்டாய்.
இருப்பினும் உன் மூலம் திறந்த என் இதயத்தில் உண்டானது தானடி காதல் .........