தூறல்
ஒரு
கணநேர
காத்திருப்பு - அதிலும்
ஒரு துளி கண்ணீர்
உலர மறுத்து
வலிகளை வலுவாக்கி
என் நீண்ட
எதிர்பார்ப்பையும்
நிறைந்த
ஞாபகங்களையும்
புரையோடிய
வேதனைகளையும்
சிறுதுளி அன்பிற்கான
நிரம்பிய
ஏக்கங்களையும்
வலிதாக்கி
நீ வராமலேயே
ஏன்
மௌனித்து
பேசுகிறாய்
இணையத்தில்
என் காதல் ...
நினைவுகளை
நீ உன் கண்களால்
முத்தமிட்டு சென்றிருப்பாய்
சேதாரம் செய்யாதே
மரணித்துப் போகிறேன்
உன்னோடு
ஒவ்வொரு நொடியும்