காட்சி பொம்மைகள்

இன்னும் சிறிது
காலங்களில்
நம் பிள்ளைகளுக்கு
நாம் காட்டும்
காட்சி பொம்மைகள்
உண்மை மரங்களையே !!!

அம்மா :
அதோபாரு அங்க
தெரியுது இல்ல
அதுதான் மரம் !!!

குழந்தை:
அம்மா அம்மா
அதில் என்னென்ன
இருக்கும் ?


அம்மா:
அதுல தான்
காய் ,பழம் பூ,
விறகு, எல்லாம்
கிடைத்தது !

ஆனா, இப்போ எல்லாம்
காய்களையும்மறந்து ,
கனிகளையும்
மறந்து ஒதுங்கி
நிற்க நிழலின்றி
வெப்பத்தில்
வேகிறோம்
பாப்பா !!!!


குடிநீரும் இல்லை !!
குளத்துநீரும் இல்லை!!
புற்செடியும் இல்லை !!
முட்செடியும் இல்லை !!

ஆடு மாடுகளும்
கை விட்டு எண்ணும்
காட்சி பொம்மைகள்
ஆகிவிட்டது !!!

நோய்களின் பெருக்கமும்
சாவுகளின் எண்ணிக்கையும்
தலை விரித்தாடுகிறது!!!

குழந்தை:
அம்மா இதை
எப்படி தடுப்பது ??

அம்மா:
இதெல்லாம்
கை மீறிப்போன
விசயமாகிடுச்சு
இனி இதை எல்லாம்
மாற்ற முடியாது
பாப்பா !!!

பாப்பா :
அப்ப எங்க
காலம் எப்படிம்மா
போகும்?????????

பாப்பா :
இப்ப நாம பாக்கற
மரத்த யாரு நட்டா
அம்மா?

அம்மா :
இதெல்லாம் நம்ம
தாத்தா காலத்துல
நட்டது பாப்பா !

அதனாலதான் நமக்கு இப்ப
கொஞ்சமாவது
மூச்சி விட முடியுது !!!

பாப்பா;
அம்மா அப்ப
நாங்க உங்கள
மாதிரி ஆகும்போது
எப்படி அம்மா
மூச்சி விடுவோம் ????????

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (1-Dec-15, 7:49 am)
Tanglish : kaatchi pommaikal
பார்வை : 164

மேலே