இத்தனை பரவசமா
தந்தியறுந்த வீணையென்று
சுருதி சேர்க்கப்படாமல்
கந்தறுந்து போன வாழ்வியல்
விண்ணென்று சுருதி கூட்டி நின்றது
உன் சந்திப்புக்குப் பின். ....
ஆத்மாவின் ஆழமெங்கும்
ஆனந்தம் அலை புரண்டோட
ஆர் என்னை தொடுவது
எவருடைய தொடுகையால்
இப்படி ஆனந்தித்திருப்பது
என் நெஞ்சக் கூட்டில் கைபடர்த்தி
வெறுமையின் தீத்தழும்புகளை அகற்ற
உணர்வுத் தொடுகையில்
இத்தனை பரவசமா. ......