கை நழுவிப்போன

இறுக்கங்களை நச்சரித்து
ஒருவரை ஒருவர் எச்சரித்து
இருவரும் விழுங்கிக் கொண்ட
இளவேனிலுக்கான காலங்கள்
தொலைத்துவிட்டன
வில்லங்க சான்றிதழ் வழங்க
நம் ஆயுள்களை .........
நகர்த்திய விலகல்கள் சமரசமாகி
ஸபரிசித்துக் கொண்டாலும்
கேலியாய் கிண்டலடித்து
கைதட்டி சிரித்துக் கிடக்கிறது
நம்மிடம் இருந்து
கைநழுவிப் போன நிமிடங்கள்