தமிழகமே உன் தலையெழுத்து என்னவோ

தமிழகமே
படிக்காத முன்னோர்களிடம் நீ
பொன் விளையும் பதுமையாய் இருந்தாய்
என் போன்ற படித்த மேதாவிகள் கையில்
தாசியாய் போனாயே!!!!........

படிக்காத பாமரன்
உன் நீர் ஆதாரங்களை காத்தான்......
ஆனால் இன்று
படித்தவன் உன் நீர் நிலையில்
வீடு கட்டி தனித்திருக்க வைத்தான்..........

முன் தமிழர்
உன்னை வணங்கினர்......
உன் வள செல்வங்களை மதித்தான்......
இப்போது நிலமெல்லாம்
அடுக்கு மாடியாய்.........

முன் தலைவன்
மக்களுகானவன்.....
இன்று தலைவன்
அவன் மக்களுக்கு ஆனான்.....
தன் மக்கள் என்ற சிந்தை மாறி
தான் என்ற சிந்தை வந்தது.......

பணம் என்று ஓடி ஓடி
பணம் தண்ணீரில் போவதை
பதைப்புடன் பார்க்கிறான் - இன்றைய
படித்தவன்........

சாராய கடை வைத்தால்
சட்ட சபையில் பேச வாய்ப்பு
என் தேசத்து அரசியல்.......
சாராயக்கடை கோவில்கள் ஆவதும்
குளங்கள் சாக்கடை ஆவதும்
இங்கு மட்டும்தான்............

இனியேனும் தமிழே!!
என் தேசம் சிந்திக்காத
விவசாயத்தை மதிக்காதா!!!!!
ஏங்கும் தமிழகம்......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (2-Dec-15, 9:00 am)
பார்வை : 190

மேலே