பண்பாடு

பண்பாடு என்ற ஒன்றை
வாயால் மட்டுமே
பேசி வருகிறோம்

ஏதோ ஒரு பண்டிகையை
கொண்டாடுகிறோம்
ஏன் கொண்டாடுகிறோம்
என்று கேட்டால்
சொல்லு தெரிந்து
கொள்கிறேன்
என்கிறோம்

நூறில் பத்து பேருக்கு
தான் உண்மையான
விளக்கம் தெரிகிறது

இவைகளை நாம்
முதலில் அறிந்து
அர்த்தமுடன் நம்
பிள்ளைகளுக்கு கற்றுக்
கொடுத்தால் தான்


பிள்ளைகளும்
பெருமையுடன் பின்பற்ற
முடியும்!

இல்லையெனில்
விவாகரத்தும், வெறுப்புணர்வும்
மேலோங்கி விருந்தோம்பலும்
ஆடைமுறைகளும் அடியோடு
மறக்கப்பட்டு போய்விடும் !

பின் பண்பாடு என்ற ஒன்றை
பாட்டாய் பாடினாலும்
அது பின்பாட்டாய் போய்
பண்பாடு பஞ்சாய்
பறந்துவிடும் !

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (2-Dec-15, 10:46 pm)
Tanglish : panpadu
பார்வை : 74

மேலே