உன்னப் போல யாரும் இல்ல
உன்னப் போல யாரும் இல்ல
அன்பு சொல்லி அழகா
பாத்துக்க,
உறவு கூட மறந்து போனேன்
உன் அன்பில் வாழும்
ஏக்கத்தில்
அழகா... அன்பா... அறிவா...
உன்னப் போல யாரும் இல்ல...
கடைக் கண் பார்வையில்
கதைகள் சொல்ல,
காற்றாய் என்னோடு கலக்க,
பூமி போல என்ன சுத்த,
பூவாக பார்த்து ரசிக்க
உன்னப் போல யாரும் இல்ல...
அன்பு கொள்ள அன்னையாக,
அறிவு சொல்ல ஆசானாக,
கோபம் கொள்ள குழந்தையாக
இனி உன்னப் போல யாரும் இல்ல...
பேசி பேசி சிரிக்க வைக்க,
பேச்சை மறந்து மடியில் தூங்க,
மனம் போல என் கூட
மரணம் வரை தொடர
உன்னப் போல யாரும் இல்ல...
உயிர் காக்கும் தோழனாக..!
உயிர் தரும் காதலாக ..!
உன்னப் போல யாரும் இல்ல
இனி எனக்கென்று சொல்ல...
Askiya