அழியாத காதல்
என் சித்தமெல்லாம் நித்தமுனை பூஜிக்க வேண்டும்
என் தேகமெல்லாம் முத்தமதனை யாசிக்க வேண்டும்...
என் விழிபடும் பாதையெல்லாம் நீயாயிருக்க வேண்டும்
நான் வழிபடும் நேரமெல்லாம் அருகிலிருக்க வேண்டும்..
உன் பாதம் படுமிடமெல்லாம் ஓவியமாய் மாற வேண்டும்
நீ புன்னகைக்கும் நொடியெல்லாம் பூ தர வேண்டும்...
ஆயுள் முழுக்க மச்சமாய்
உன்னோடு ஒட்டியிருக்க வேண்டும்...
உன் எச்சம் இருக்கும்வரை
என் மிச்சமும் இருக்கும்..