காதல் சாகலாமா

நீண்ட ....நாட்களாக
நெஞ்சில் நிலைகொண்டிர்ந்த
காதல் புயல்
இன்றுதானடி
கரையை கடக்கிறது
உன்னை .....நேசித்தது
உண்மைதான்
ஏன் ?தெரியுமா !
உன் கள்ளம் கபடமற்ற
பேச்சு ......
உன் கருவிழி
செய்த சூழ்ச்சி
எனக்கு மிகவும்
பிடித்திருந்தது ...
கை பிடித்து
எழுத பழகும்
கான்வண்டு குழந்தையாய்
நான் முதன்முதலாய் ........
எழுதிய காதலை
கிறுக்கல் என்று
சொன்னவள் .நீ -அதனால்
அழித்து கொண்டிருக்கிறேன்
அடையாளம் தெரியாமல்
தண்ணீரால் .....அல்ல
என் கண்ணீரால்
இந்த .....பூமியில்
ஆயுள் முடிந்தவன்
சாகலாம் !
ஆரம்பமாகும் ...ஒரு
காதல் சாகலாமா ?

எழுதியவர் : இரா .மாயா (3-Dec-15, 3:32 pm)
பார்வை : 92

மேலே