இதய தெய்வங்கள்
வேடமிட்டு
தமிழைத் தாறுமாறாய் பேசி
ரசிகர்களை
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி
பெரும்பணம் சம்பாதிக்கும்
இதய தெய்வங்களின் படங்களுக்கு
பாலாபிஷேகம் நடத்தி
பக்தியைக் காட்சியாக்கும்
ரசிகப் பெருமக்களே
அவர்களின் கூத்தை
பலமுறை பார்த்து ரசித்து
பணத்தை வாரி வழங்கும்
உண்மையான
இதய தெய்வங்கள்!