நீ தான் நான்

சிரிப்புக்குள்
அமிர்தம் குழைத்து
அள்ளி தெளிக்கிறாய்..........

முத்தங்களுக்கும்
முகவரி தந்து
முகத்திரை கிழிக்கிறாய்........

என் மனதின்
மையம் தொட்டு
மையல் கொள்கிறாய்........

நெரிசல் இல்லாத
தெருவில் உரசி
மேனிக்குள்
மின்சாரம் பாய்ச்சுகிறாய்........


கண்ணீரின்
காரணம் உரைத்து
என் மார்பக பள்ளத்தில்
முகம் பதித்து
மூச்சு விடுகிறாய்.......

நான் பக்கத்தில்
நெருங்கும் போது
தீப்பிடித்த தென்றலாகும் நீ
நான் துக்கத்தில்
நொருங்கம் போது
துடிதுடித்து போகிறாய்.......


கண்ணீருக்கு
கைக்குட்டை நீட்டும்
சிலரின் மத்தியில்
நீ மட்டும்தான்
கைகள் நீட்டினாய்.......


மழையில் நணையும்
போதெல்லாம்
உன் சுவாச சூட்டால்
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் ஏற்றுகிறாய்.....
Sari
உன் பார்வையின்
ஸ்பரிசத்தில்
பயணித்த என் இரவுகளை
வெட்கத்தின் உச்சத்தில்
மிச்சபடுத்துகிறாய்...........


காதலுக்கும்
காமத்திற்குமான
அர்த்தம் உணர்த்தி
நெஞ்சுகூட்டுக்குள்
தஞ்சம் அடைகிறாய்......

சந்திப்பிற்கும்
பிரிவிற்குமான
சந்தேகம் உடைத்து
என் சமுத்திர இதயத்துள்
சங்கமித்துவிட்டாய்.........

நீ தான் நான்
நான் தான் நீ
இனி நாம் பிரிவதற்க்கு
வாய்பே இல்லை
இருப்பினும்
பிரிவோமாயின்
நாம் வாழந்ததற்கும்
வாழ்வதற்க்கும்
அர்த்தமே இல்லை......

எழுதியவர் : வேலு வேலு (5-Dec-15, 12:03 am)
Tanglish : nee thaan naan
பார்வை : 601

சிறந்த கவிதைகள்

மேலே