முதிர் காதல் செய்ய

என்
காதலியே !
வெண் இதய
மென் வருடலே
வருவாயா
பருகி விட - பசி தீர்ந்து ..

உன்
மோதலிலே
சிதறுண்ட
கார் முகிலன்
தருவாயா
மருகி விட - மார்பு மடி அமர்ந்து

அசைந்தசைந்து
பிசைந்தெடுக்கிறாய்
நகல் எடுத்து
புகல் கொடு
தடவை ஒன்று - சாகாது வாழ்ந்து

அனல் தணிந்து
உன்னுள் அமிழ
தட்ப மதியே
தருவாயா - கதிரவன்
முதிர் காதல் செய்ய - முத்தமொன்று

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (5-Dec-15, 5:10 am)
பார்வை : 163

மேலே