கலகம் புனைந்த படி
முகவரி அற்ற அன்பு ஒன்று
முகாரி பாடி நிற்கிறது
அனுமதி மறுப்பு செய்யப்பட்ட
காதல் பிரதேசம்
அமைதி இழந்து தவிக்கிறது
துடிப்பறுந்த சுவாசக்குழல்
திராணியற்று துடிக்கிறது
விரகமின்றிய நினைவுத்தடங்கள்
தூரித்துச் செல்கிறது
என் விடியல்களையும்
எடுத்துக் கொண்டு. ........
கலகம் புனைந்த படி
கனதியான ஞாபகங்களையும்
காவிக் கொண்டு போகிறது
கரு மேகம் கரைந்து கொண்டு. ...
நிறையாத புலர்வுகளில் மறைந்து
நிம்மதி சிதைந்து - வலி
சுரங்கமாய் நிறைகிறது
வாழ்வு அமிழ்ந்து கொண்டு
ஆரவாரமில்லா அர்த்தமற்ற முடிவுகள்
அமைதி புதைத்து
ஆத்மாவை சாவுக்கழைத்து
சங்கீர்த்தனம் செய்து
முளைத்தெழுகிறது
- பிரியத்தமிழ் -