சுப்பையாவும் குப்புவும் பாகம் 2 - உதயா

சுப்பையாவும் குப்புவும் பாகம் 2 - உதயா
--------------------------------------------------------------

மாலை நெருங்கிவிட்டது, வானும் மேற்கு திக்கில் செந்நிறமாய் விளக்கேற்றி அணைக்கிறது. காடைகளும், கௌதாரிகளும், எங்கோ தொலைதூரத்தில் குள்ள நரிகளும் சத்தமிடுகிறது. அருகில் உள்ள மரக்கிளைகளில் ஆந்தை அலறுகிறது. வானில் உயரத்தில் வில்லன் குருவிகளும், அந்த கம்ம கொள்ளையில் ( கம்பு தானியம் விளையும் வயற்காடு ) சிட்டுக் குருவிகளும், குளக்கரையில் கொக்குகளும் , வீடுகளுக்கு ஓரத்தில் இருந்து காக்கைகளும் இரவிடம் நோக்கி பறந்து செல்கிறது. கிணறுகளில் முளைத்துள்ள மரக்கிளையில் தூக்கனா குருவிகள் கூடு கட்டி விளையாடுகிறது. சலங்கைகள் அணிவிக்கப்பட்ட காளை மாடுகள் வண்டியினை இழுத்துக்கொண்டே ஒருவிதமான " ஜங் ஜங் " என்று ஒலியை எழுப்பிக்கொண்டே செல்ல சுப்பையாவும், ராமுவும் தங்களின் ஆடுகளை துரத்திக் கொண்டு வீடு திரும்புகின்றனர்.

இரவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. வெளிச்சம் மிக வேகமாக கருப்பு ஆடையை உடுத்திக்கொண்டது. நேரம் இரவு 8 -ஐ நெருக்கி இருக்கும். சுப்பையாவின் அம்மா வேக வேகமாக சமையல் வேலையை கவனிக்கிறாள். சுப்பையாவின் ஒரே தம்பி சின்னப்பையன் திடீரென அழ தொடங்குகிறான். அடுப்படியில் இருந்தவாறே " டேய் பெரிபையா, தம்பி அழுறா பாரு ஏனையில( புடவை தொட்டில்) போட்டு ஆட்டுடா " என்றாள் . " சேரி மா " என்று சுப்பையாவும் தம்பியை தூங்க வைக்கிறான் . சுப்பையாவின் தம்பிக்கு கிட்ட தட்ட 2 - வயது இருக்கும்.

குப்புசாமி வீட்டுக்கு வேளையில் கை, கால் கழுவும் சத்தம் கேட்டு " அம்மா ...... அப்பா வந்துச்சி மா ..." என்றான் சுப்பையா. அடுப்படியில் இருந்து சட்டி, தட்டு அனைத்தும் தயாராக எடுத்து வைத்து , தட்டில் கலியினை போட்டு கருவாட்டு குழம்பு ஊற்றிவைத்து " வா மச்சா பசியா இருப்ப துண்ணு " என்றாள் அம்மாக்கண்ணு.

குப்புசாமி சாப்டுக்கொண்டே " தே நம்ம பெரியவனுக்கு தான் வயசு ஆதே ஒரு கால் கட்டு போட்டுலானு நெனைக்கிறது நீ என்ன சொல்ற " என்றதும் " ஆமா மச்சா அதா என் நாத்தனார் பெத்து வெச்சிகிறாளே அவ பெரிய பொண்ணு குப்புவை கண்ணாலம் பேசி முச்சிலாம் " என்றாள் அம்மாக்கண்ணு.

மறுநாள் காலையில் குப்புசாமியின் தங்கச்சியான சின்னப்பாப்பாவின் பெரிய மகள் குப்புவை சுப்பையாவிற்கு மணம் பேசி முடித்துவிட்டனர். குப்புவிற்கு வயது 6 - இருக்கும் . குப்புவிற்கு ஆறுமுகம் என்று ஒரு தம்பியும் , மொட்டாமா என்று ஒரு தங்கையும் உள்ளனர். ((( அந்த காலத்தில் கிராமப் பகுதியில் சிறுவதில் திருமணம் செய்வதுதான் வழக்கம் )))

திருமண சேதியை உறவுக்காரர் மற்றும் பங்காளிகளுக்கு தெரிவிக்க பாலூரில் உள்ள மட்டுட்டு குப்பத்திற்கு அத்திமூரில் இருந்து நடந்தே செல்கிறார் குப்புசாமி. அப்போதெல்லாம் பேருந்து வசதி இல்லை. எங்கு சென்றாலும் நடந்துதான் செல்ல வேண்டும் . அத்திமூரில் இருந்து மட்டுட்டு குப்பத்திற்கு 30 கிலோமீட்டர் இருக்கும். காலை 11 மணிக்கு புறப்பட்ட குப்புசாமி இரவு 7 மணிக்கு சென்று அடைகிறார்

குப்புசாமி வந்ததை பார்த்து அவரது உறவுக்காரர்கள் " வா மாமா ... வா மச்சா .. வாடா கண்ணு .... வா எனா ... அண்ணி எப்படி இருக்கு ... சித்தப்பா வா சித்தப்பா ... பெரியப்பா வா பெரியப்பா ... பங்காளி வா பங்காளி .. வா மவனே .... " என்று அனைத்து உறவுகளும் கூடி ... " எப்பா ஏய் ஆட்ட ஒன்னு போடுடா " என்று ஒரு திருவிழா போல குப்புசாமியின் வரவை கொண்டாடுகிறார்கள் . அவர்களின் ஒவ்வொரு முகத்திலும் இருந்த மலர்ச்சி, மகிழ்ச்சி, பாசம் , நேசம் அதையெல்லாம் வெறும் வார்த்தையில் சொல்லி புரியவைக்க முடியாது . இரத்தமும் சதையுமாய் அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். அந்த கூழலில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும் .

" வராத மன்ச வந்து கீற .... என்ன சேதி பங்காளி " என்று ஒவ்வொன்றாக வினவ .. குப்புசாமியும் வந்த நோக்கத்தை சொல்ல .. கடந்த காலத்தின் நடந்த நல்லது தீயது என எல்லாவற்றையும் பரிமாறிக்கொள்ள சில கண்ணீர்கள் பிறக்க .... கொஞ்சம் சிரிப்பொலி வலுபெற.. அன்றைய இரவு சிரவாத்திரியின் சாயலைப் பெற்றிருந்தது.

(((( என்ன சொல்வது அந்த உறவு பந்தம் பாசம் நேசம் எல்லாம் இன்று எங்கே போனது ... எங்கே என் உறவு முறைகள்... எங்கே அந்த நஞ்சில்லா பாசம் ... எங்கே எங்கே ..... இந்த கணம் நினைத்தால் கூட என் தேகம் துடிக்கிறது ... விழியோரம் சுனை பிறக்கிறது ..... எவ்வளவு பணம் வசதி இருந்தும் என்ன பயன் ..... உண்மையான பாசங்களும் நேசங்களும் இல்லையே ... ))))))))))

விடிந்ததும் கோழி , ஆடு , பன்றி என வாழை இலையில் படுத்திருந்தது. அனைத்தையும் முடித்துவிட்டு ஊரின் எல்லை வரை வந்து உறவுகள் வழி அனுப்ப .. குப்புசாமி தனது கிராமத்திற்கு புறப்படுகிறார். அன்று மாலை 5 மணிக்கெல்லாம் தன் வீட்டினை அடைகிறார் குப்புசாமி. நடந்ததை எல்லாம் விவரமாக தன் மனைவிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறார். அம்மாக்கண்ணும் அனைவரையும் நலன் விசாரிக்கிறாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்த கொஞ்சம் நேரத்தில் அத்திமூரின் கொஞ்சம் வசதி பெற்றவரான ராமசாமி முதலியார் இறந்துவிட்டார் என ஊரே செல்கிறது. விடிந்ததும் தாரை தப்பட்டை மேலம் என ஊரே அவரை மயானத்தில் மண்ணில் விதைக்கிறது அவரது புகழை .... நெருப்பில் இடுகிறது அவரது சிதையை.

((((( நடுரோட்டில் ஒருவன் உயிருக்கு போராடினாலும் . வேடிக்கை மட்டுமே பார்க்கும் இந்த மிருக தலைமுறையில் பிறந்து வாழ்வதற்கு ... அந்த காலத்தில் அதுபோல ஒரு மனிதம் வாழும் கிரமத்தில் வாழ்ந்து இறந்து இருக்காலம் என்று பலமுறை எனக்கு தோன்றி இருக்கிறது ... மனிதம் உள்ள மனிதனுக்கும் தோன்றி இருக்க கூடும் )))))

சடங்கெல்லாம் முடித்துவிட்டும் அன்று இரவு ஒரு கூத்தையும் நடத்த முடிவு செய்தது , அதற்க்கு ஆயத்தமாகுகிறார்கள். குறவன் குறத்தி நாடகம் முடிவு செய்து, அதில் குறத்தி வேடத்தில் சுப்பையா நடிப்பதால், சுப்பையாவை அலங்காரம் செய்கிறார்கள் அந்தப் பகுதி பெண்கள். ஆடை அணிகலன் என அனைத்தையும் அவர்களே எடுத்து வந்து சுப்பையாவை ஒரு பெண்ணைப் போல சிங்காரிக்கிறார்கள்.

சுப்பையாவின் அம்மாவிடம் அந்த பெண்கள் சென்று " அத்த எப்போ பாத்தாலும் உனக்கு பொண்ணே இல்லன்னு வெசன(கவலை) படுவியே வந்து பாரு என் தம்பிய சொம்மா ராணி கெணக்கா கீறா " என்றனர். சுப்பையா நல்ல கலர் எலுமிச்சை பழம் போல அதனால் அவனுக்கு அந்த வேடம் சரியாக பொருந்தி விட்டது . அம்மாக்கண்ணு சுப்பையாவை பாத்து அள்ளி முத்தமிட்டாள்.

நேரம் மணி 9 -ஐ நெருங்கிவிட்டது. கூத்து ரசிக்க அனைவரும் ஆவலாக வந்துவிட்டனர். இன்னும் சிலர் வேடம் பூசாமல் இருப்பதால் கொஞ்சம் நேரம் நகைச்சுவை கலைஞ்சனை சமாளிக்க சொல்லி அனுப்பிவிட்டனர் .மேடையின் திரை திறந்ததும் " பபூன் வந்துடான் பபூன் வந்துடான் " என்று சிறுவயது பிள்ளைகளெல்லாம் கைதட்டி வரவேற்கிறார்கள். கூட்டத்தை அமைதி காக்க சொல்லி தன் பணியை தொடங்குகிறான் அந்த நகைச்சுவை கலைஞ்சன்,

" எப்பா எம்மா தூரம் கீது கூட்டம் .. உங்களலா பாக்க என் ஊர்ல இருந்து காத்தால கெளம்புன ..

நானும் என் பொண்டாட்டியும் பட்டணம் போனப்போ போட்டா வொண்ணு புச்சினு வந்தோம் . அத என்

போடாட்டி என்ன பண்ணா தெரியுமா .. மச்சா போற வழில இத என் தம்பி ஊட்டுல குத்துடு போனு

சொன்னான்னு.... நானு எத்துனு வந்த .. வர வழில பொட்டி கடைல பீடி வாங்க துட்டு எடுக்கும் போது

போட்டா கீழ வீந்துசி ... அத ரோட்ல போன ஒரு பொண்ணு காலுல மெச்சினு ஒரு பொம்பள கிட்ட

பேசினு இருந்தா ..... நா வேகமா போயி எம்மா தங்கச்சி .. கொஞ்சம் கால தூக்கு போட்டா எடுக்கணும் னு

சொன்ன....... இதுல என்னையா தப்பு ... அந்த ஊரே சேந்துனு என்ன கட்டி போட்டுடு அடி அடின்னு

அடிக்கிது ...

அவங்க அச்சிதுல நாக்குல வறண்டு போச்சி ... அங்க பக்கத்துல இருந்த கொளத்துல தண்ணி குடிக்க

போன .. அங்க ரெண்டு பொம்பளைங்க துணியே இல்லாம குளிச்சினு இருந்தாங்க..... எனக்கு இனா

தெரியும் அவங்க தண்ணிக் குள்ள இருந்தாங்க தல மட்டும் தான் வெளிய தெரிந்துச்சி.... நான் குனிஞ்சி

தண்ணி குடிக்கும் போது ... ஜோப்பில இருந்த போட்டா தண்ணி வீந்துசி ... நான் இன்னா நெனைச்சனா...

அவங்க குளிக்க போதே நாம தண்ணீல ஏறங்கனா அதூ தப்பு ... அதான் நான் இன்னா சொன்ன எம்மா

தங்கச்சி எல்லாரும் எந்துருங்க நான் போட்டா எடுக்கணும் னு சொன்ன .... இதுல என்னய்யா தப்பு .. நா

இப்படி சொல்லிடனு .. அந்த ரெண்டு பொம்பளையும் என்ன தண்ணிக்குள்ள இழுத்து போட்டுனு அடி

அடினு அச்சி பூட்டாங்க " என்றதும் அனைவரும் சத்தமிட்டு கைதட்டி சிரித்தனர்.

அடுத்து குறவன் வந்து எதோ பாட்டு பாடி செல்ல .. அடுத்து கட்டமாக குறத்தி வருகிறாள் ( அதாங்க நம்ம சுப்பையா ) " சொக்காப் போட்ட நவாப்பூ " என்ற பாட்டினை பாடிக்கொண்டே மேடையேற ... அனைவரும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.... அடுத்து எந்த கலைஞ்சன் மேடை ஏறினாலும் " அந்த குறத்திய வந்து ஆட சொல்லு " என்றே சத்தமிட தொடங்குகின்றனர் கூட்டதினர் . ஏனெனில் அவ்வளவு அழகாக நடித்தான் சுப்பையா.

தொடரும் .........

எழுதியவர் : உதயா (5-Dec-15, 11:29 am)
பார்வை : 174

மேலே