சென்னைக்கு ஒரு பாட்டு

ஆற்றங்கரை எங்கே....
ஆடும் மரம் எங்கே....
வெட்டி தான் நட்டியாச்சு
கட்டிடம் தான் கட்டியாச்சு....
கொழுத்தும் வெயிலுக்கோ கொண்டாட்டம் வந்தாச்சு....
சுற்றும் பூமிக்கோ கோபம் உண்டாச்சு.... விட்டுத்தான் போகுமா விடாத மழையாச்சே

கொட்டித்தான் தீர்க்குமே பூமிதான் நண்பனாச்சே....

ஆற்றையும் ஏரியும் தேடித்தான் ஒடுது மழை இங்க வெள்ளம் தான் சூழுதே....
உயிர் போச்சு உடமைகள் போச்சு மக்கள் வாழ்க்கை திண்டாட்டம் ஆச்சு... தனக்குதானே செஞ்ச வினையிது யார சொல்லி தீரும் இனியிது....

முடிஞ்சா நட்டு ஏரிய வெட்டு...
வருங்காலம் வாழட்டும் மழலை மொட்டு....




!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (5-Dec-15, 5:33 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 151

மேலே