நுரைப்பூக்கள்

நேற்றும் நாளையுமாகிய
இரண்டு கரைகளைத் தழுவி
‘இன்று'
ஒரு நதிபோல
ஓடிக்கொண்டிருக்கிறது .

அது
அதிகாலையில்
சிலிர்த்தும்
அலுவல்களில்
ஆர்ப்பரித்தும்
அந்தியில்
தளர்ந்தும்
முன்னிரவில்
சல்லாபித்தும்
பின்னரவில்
உறைந்தும் விடுகிறது


என்றும் ,
என்றென்றும்
'இன்று' மட்டுமே
இருக்கிறது ...
உயிர்ப்புடன்
பாய்கிறது...
அலைக்கரங்கள் மேவி
நுரைப்பூக்கள் தூவி ..

எழுதியவர் : கவித்தாசபாபதி (5-Dec-15, 6:24 pm)
பார்வை : 168

மேலே