என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

முட்டாள்கள் உலகில்
முன்னேறும் தமிழகம்?
பொய் பேசிப்பேசி புரட்சி
செய்தால் மீண்டும் மழை
வந்து கேள்வி கேட்கும்..
_____________________________________________________
செய்தி:
சென்னை: தமிழக தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், பல சடலங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவர் நெல்லையில் வைத்துள்ள கட்-அவுட் மக்களின் கடும் கோபத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் என்பவர் வைத்துள்ளதாக கூறி ஒரு கட்-அவுட் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
__________________________________________________