இலட்சியம் ----முஹம்மத் ஸர்பான்

பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் தள்ளாடும் வாழ்க்கை பாதையில் பெறுமதிமிக்க பயணங்கள் இலட்சியம்.
விரலில்லாதவன் பேனா பிடிக்க முடியாது;குருடனால் வானவில்லை ரசித்து ருசிக்க முடியாது;முடவனால் சேற்றை கடக்க இயலாது என்பதை போல் முயற்சி என்ற நாமகரணத்தை மட்டும் சொல்லிக்கொண்டு எழுந்திருக்காமல் உறங்கிக் கிடப்பவனுக்கு முயற்சி என்ற நம்பிக்கையும் சாபமாகிவிடும்.

நீ யார் என்று உணர்வதற்கு பிறரை பின்பற்றி நடக்கத் தேவையில்லை.உன்னை படி,உன்னை நேசி,உன்னை மட்டும் விரும்பு..,வாழ்க்கை என்பதும் எளிதாக புரிந்துவிடும்.எந்த இலக்கை அடையப்போகின்றாய் என்பதை தேர்ந்தெடுத்து உன் மதியோடு விவாதித்துப்பார். முள் நிறைந்த பாதையும் இலகாகத்தெரியும்.எட்டி பிடிக்க முடியாத விண்மீன்களும் உன் கைகளில் ஒட்டிக் கொள்ளும்

இலக்கை அடையும் வரை கொட்டிக் கொண்டிருக்கும் அருவி போல் ஓடிக் கொண்டு இரு.எட்டிய பின் அத்துறையிலுள்ள ஆறு,கடல்,மற்றும் சமுத்திரம் எனும் கிளைகளுக்குள் புகுந்து கொள்! உலகம் உன்னை நாடி வரும் போது நிலவிற்கும் கடிதம் எழுது;நொடிகளில் நிமிடத்தை கடக்க வேண்டும்.நிமிடத்திற்குள் நாழிகையை அடக்கி பார்.முதுமையிலும் இளமை பிறக்கும்;இறந்த பின் பெயரும் நிலைக்கும்.

லட்சக்கணக்கான விந்து முட்டைகளின் போராட்டத்தின் பின் தான் சூளோடு கருவொன்று உருவாகிறது;
ஆயிரம் தடவைகள் விழுந்ததன் பின்னரே முதல் தடவை எழுந்து நின்றோம் என்பதைப் போல் உன் இலட்சியமும் போராட்டத்தோடு அமையவேண்டும்.மாறாக,முதல் தோல்வியிலேயே விழுந்து விட்டால் எழுந்து நடக்க முடியாத குட்டை போல் முடமாகி விடுவாய்.சமூகமும் குப்பையென நினைத்து உன் மேல்
உமிழக்கூடும்.

"அந்தத்துறையில் நீ வாழ நினைப்பது உன் விருப்பம்
அந்தத்துறையை நீ வாழ வைப்பது உன் இலட்சியம் "

என்ற,கவிப்பேரரசின் வைர வரிகளைப் போல் உன்னால் உன் இலட்சியம் சாகாமல் வாழவேண்டும். சுவாசத்திலுள்ள துடிப்புகளை எண்ணுவதை விட்டுவிட்டு விண்ணிலுள்ள நட்சத்திரங்களை எண்ணிப்பார்;கண்ணில் தெரிகின்ற வானவில் வண்ணங்களை விட்டு விட்டு மண்ணுக்குள் ஒளிந்துள்ள வண்ணங்களை குழி தோண்டி தேடிப்பார்.

போட்டியில்லாத உலகம் வேண்டாம்.அது உன் இலட்சியத்தை சீர்குழைத்து விடும்.எல்லையில்லாத வானில் இலட்சியம் எனும் பட்டத்தை கட்டி பறக்கவிடு!நூல் அருந்த பின்னும் உயரப்பறக்கக் கற்றுக்கொடு!காற்றோடு மழை வந்த பின்பும் திசைமாறாமல் பறந்து கொண்டு இரு!இலட்சியம் வெல்வாய்!உலகை ஆள்வாய்!!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Dec-15, 1:05 pm)
பார்வை : 563

சிறந்த கட்டுரைகள்

மேலே