உன் அன்பிலே வாழ்வேன்

வலித்தாலும் இதயம்
இயக்கம் நிறுத்தாமலே
துடிக்கின்றது...
வடித்தாலும், விழி நீர்
உன் விம்பத்தையே
நாடி நிற்கின்றது...

கோடை வெயில்
எத்தனை கோரமெனிலும்
தாங்கலாம்,
என்றாயினும் நிழலின் குளுமை
அணைத்துச் செல்லும்
என்ற நம்பிக்கையிலே...
அது போலே உன் உறவும்..!

உயிர் கொல்லும் - உன்
மௌனங்களைக் கூட
தாங்கி நிற்பேன்,
எனை நீ- உன்
அன்பிலே செதுக்கி
வைத்திருப்பதால்...

மனம் தேடும்
ஏக்கங்களை கூட
தாங்கி நிற்பேன்
எனை நீ - உன்
உறவிலே கோர்த்து
வைத்திருப்பதால்...


ஏழேழு ஜென்மங்கள்
எனக்கு வேண்டாம்,..
ஒற்றை பிறவி கொண்டே.,
அத்தனையும் மொத்தம் காணும்
உன் அன்பு மட்டும் எனக்கு
அட்சய பாத்திரமானால்...

இன்று போல் என்றுமே!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (7-Dec-15, 6:35 am)
Tanglish : un anbile vaazhven
பார்வை : 1052

மேலே