தமிழில்லைத்தாயே
தமிழில்லை.....தாயே......
என் தாய்
எனக்குள் ஈய்ந்தாய்
கருக்கொடுத்தாய்
உருக்கொடுத்தாய்
உயர்வாய் கற்பித்தாய்
உலகையே காண்பித்தாய்
பண்பை படிப்பித்தாய்
பார் போற்ற வளர்த்தெடுத்தாய்
விழித்திருந்தாய்
விழி உறக்கம் மறந்திருந்தாய்
பசித்திருந்தாய்
பலருள்ளத்தில் நிலைத்திருந்தாய்
துக்கம் களைந்தாய்
துயர் துடைத்தாய்
இன்பங்கள் தந்தாய்
இனிப்பாக இருந்தாய்
உன் இனிமைகள் இழந்தாய்
முத்தங்கள் சொரிந்தாய்
முழுமையை தருவித்தாய்
துன்பங்கள் நிறைந்தாய்
துயரத்தை புதைத்தாய்
உறவுகள் நிலைத்தாய்
உண்மைகள் வடித்தாய்
ஊமையாய் இருந்தாய்
உணர்வுகள் இழந்தாய்
எண்ணெயாய் கரைந்தாய்
எண்ணத்தில் நிறைந்தாய்
திரியாய் எரிந்தாய்
தீபமாய் மிளிர்ந்தாய்
மேகமாய் அழிந்தாய்
விழி மழையாய் பொழிந்தாய்
பூவாய் மலர்ந்தாய்
பொக்கிஷமாய் சிலிர்த்தாய்
தளிராய் துளிர்த்தாய்
தண்மையாய் குளிர்ந்தாய்
பாசத்தை கற்றுத் தந்தாய்
பந்தத்தால் நொந்தாய்
உன் இருப்பை மறந்தாய்
இவ்வாழ்வை துறந்தாய்
வேதனையை நிறைத்தாய்
வேகமாய் முடிந்தாய்
உனக்கு அளவிலதாய்
உலகில் ஈடில்லை தாய்
உன்னை எழுதுவதாய்
தமிழ் இல்லைத்தாயே. .............
- பிரியத்தமிழ் -