முதியோர் இல்லம்

இது அபாய சங்கு

கால ஓட்டத்தில் களையிழந்து
கரைந்து காலமான‌
மனிதத்திற்க்கு மறு வண்ணமிட‌
அவசரத்தை உணர்த்தும்
ஆங்காங்கே உதித்த திடிர்சாமி;

பெத்த மக்கள் சுகபட‌
செத்த பெத்த மனங்களின்
பிணவறை;

வயசாகிபோனதால் பழசாகிபோன‌
அப்பா அம்மா எரித்த
போகி கறை

தலைமுறை இடைவெளி
தாளம் வாசிக்க‌
தஞ்சம் தேடி போன தள்ளாதவர்களின்
பழய பாட்டு பட்டறை

அனுபவம் சுமந்து அமைதியில் கழிந்து
அனலில் சேர காத்திருக்கும்
கணக்குகளின் வகுப்பறை;

சுருக்கு தோல் சொந்தங்களை
சுருக்கி இருக்கி சுருட்டி
கொண்டுபோக வருபவன் வருமுன்னே..
வ‌ருபவனுக்கு வசதியாய்
இருக்கடுமென‌
வடிவமைச்ச வாடகை சுடுகாடு;

சமுக சேவை போலிகளின்
சாதனை பட்டியலில் எப்போதும் வரவிலிருக்கும்
நிழர்பட நிலையங்கள்;

சில தாலி கொடிகளின்
சீர் இல்லா சிற‌கிற்க்கு
போர் கொடி தூக்கியதால்
போவென்று அறுக்கபட்ட
தொப்புள் கொடிகளின் தோப்பு;

நாளைய நம் பிள்ளைகளுக்கு
நம்மை நடத்த‌
நாட்களை நகர்த்த
நாமே எழுதிவைத்த
நாட்குறிப்பின் முன்னுரை

இது
இன்னுமா உனக்கு
"உரை"க்கவில்லை.

எழுதியவர் : ஆரோ... (8-Dec-15, 3:11 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 306

மேலே