மழையடி நீயெனக்கு-ரகு
உன்
நினைவுகளைப்போல
சதா
சொட்டிக் கொண்டிருக்கிறது
இந்த மழை
மழைப் பாடலோடு
சிறகடிக்கும்
குருவிக்கு
வானம் எத்துணை
அழகோ
அவ்வழகு நீயெனக்கு
காற்றில்
என்னிதழுக்கு
வந்து சேர்ந்த துளி
உன் வளையல்
கைகள் பட்டுத்
திரும்பியிருக்கலாம்
துளிர்த்தெழக்
காத்திருக்கும்
விதைபோலத்தான்
என் காதலும்
விதைக்கு மழை
எனக்கு நீ
குடையிருந்தும்
என்னோடு மட்டும்
நீ நனைந்தபடி
நடந்து வருகிறாய்
உன் காதலை
மழைதான் சொல்கிறது
குடிசையைத்தான்
மழை
ஆத்மார்த்தமாகத்
தழுவுகிறது
என்
குடிசையில்
நீ
மழையாகிவிடு...!