தேவதை ஈன்றெடுத்த முத்து

முதல் முதலில் கண்டேன்
என் தேவதை ஈன்றெடுத்த முத்தை...

வார்த்தைகளில் வரிகளின்றி
அளவுகளில் குறைவின்றி என் ஆனந்தத்தை
பேரானந்தம்மாக்கினாள் நான் பெற்ற மகள்...

புன்னகை கோடி உள்வாங்க
என்னவள் முகம் பார்த்து மலர்ந்தேன்
குட்டிமங்கை அவளருகில் கண்டு சிலிர்ந்தேன்...

காதலின் உச்சம் உணந்தேன்
எனக்கென இறைவன் கொடுத்த புது உறவில்
முழுமை அடைந்தேன்...

ஆசையாய் இருகைகள் ஏந்தி வாங்கி
மார்போடு அணைத்துக்கொண்டேன்
மிச்சமின்றி கண்ணம்முழுக்க முத்தமிட்டேன்..

இனி எனக்கனே புது உலகமானது
இன்னும் கோடிநாள் வாழ ஆசையானது..

***பர்ஷான்***

எழுதியவர் : பர்ஷான் (8-Dec-15, 2:21 pm)
பார்வை : 125

மேலே