முதல் இரவு
இரு இன மனங்களை
இணைத்து;
இரவின்
வரவில்
நன்று அன்று;
நாடி துடிக்க நகம் கடிக்க;
ஓடி விளையாடும் உணர்ச்சி சுழற்ச்சி
உச்சம் நெருங்க உதரல் மகிழ்ச்சி
உயிர்படைப்பின் உன்னத எழுச்சி
துணையோடு தொலைதூரம் போக
இணையோடு இன்பமாய் வாழ
இருவேறு உணர்ச்சிகள்
இருவேறு உடல்கள்
பீரிட்டு போரிட்டு _ அதில்
சோர்வுற்று சேர
மனித கண்டுபிடிப்புகளின்
மகத்தானது முதலிரவு;
தடையில்லை தவரில்லை
தயக்கங்கள் தாய்வீடு தவறிவந்தால்
தழுவுவதில் பெரும் தொல்லை;
வாசனை மலர்கள் ஓய்வெடுக்க
வாச அணை மலர் பாய்கொடுக்க
ஆசை கனவுகள் பந்தடிக்க
அனுபவிக்க மட்டுமே அனுமதிக்கபடும்
கடன் தொழில்;
சாரல் ஒடுக்க ஈரல் நடுக்க;
சட்டை அரைகுறையாய் தடுக்க
தன் உடல் உடை களைந்து
தானமாய் தந்துவிட
ஒரு வேறு நல்ல மனங்களின்
ஒருவாறு ஒத்துழைக்க
ஒருவர் ஒருவர்க்காய்
எடுத்த முடிவு
முதலிரவு _ தெளிக;
தீ மூட்ட திரி தேடி
நீ கைவீச வளையோசை;
நா கைவீச வளை ஓசை;
கிடைத்ததை கொண்டு
கிடப்பதை கொன்று
எடுப்பதில் திண்று
கொடுப்பதில் வென்று
உரசி உரசி மூட்டபட்ட
உயிர் தீயில் உயிர் மீட்டு
அடர்ந்த காட்டுக்குள்
கருத்த ராத்(தி)ரி) கொண்டு
ஒத்துழைத்த மனங்களின்
இனிப்பு
முதல் சந்திப்பு;
வினா? வினா?
முதன் முதலாய் தொடங்கபட்ட தொழிலில்
முதலும் முதலும் இரவலாய் இன்பமாய்
கொடுத்துகொண்டு எடுத்துவந்த இரவு;
அதனால்
முதல் இரவாய் ஆனதோ...?
உயிர்படைக்க நாம்
நம் செலவு செய்வதால்
"முதல்" இரவு முதலிரவானதோ..?
இரவுகள் அனைத்திற்கும்
முதாலாய் வைக்கபடுவதால்
முதல் இரவானதா?
முழுமையான இரவு
இலக்கியத்தில் சொல்லபோய்
முதல் கூட்டல் அல்
முதல் இரவானதோ...!?
முத்த முத்தள்ளுவதால்
முத்த அல் _ காலபோக்கில்
நடை மாறி
உடை மாறி
முதல் இரவானதா....?
முரண்;
எல்லா முதலும்
விளக்கேற்றி துவங்க
இது மட்டும் ஏன்....?
விளக்கணைத்து விலக்கு தவிர்த்து:?!!
என்ன இருப்பினும்
மானுட பிறவிகளே.....
உங்கள் முதல் இரவல்
முதலிரவாகட்டும்...
இன்பங்கள் இன்னும் கொஞ்சம்
இன்பம் துய்க்கட்டும் _ கொஞ்சி