மறுமலர்ச்சி தந்திட வா நண்பனே

இளைஞனே! எழுந்து வா!
விழ்ந்த தேசம் மீட்டிட வா!
வெள்ளத்தில் வெளி வந்த நம் நேசம்
உள்ளத்தில் இணைந்து
உறுதி போர் புரிய வா!!!!!!

தியாகிகள் இரத்தம் சிந்தி தந்த தேசம்
தியாகங்கள் பல செய்து பெற்ற தேசம்
திருடப்படுகிறது பண ஆசையில்....
தீயவர்கள், கயவர்களின் வேஷம் களைய
திராவிட மானுடம் தழைத்திட
தீக்களாய் பொங்கி எழுந்து
இருளை போக்கி ஒளி வீசிட வா!!!!!

போர்களின் பிடியில் பெற்ற தேசம்
பேராசையின் பிடியில்
போர் புரிந்து மீட்டிடுவோம் வா!!!!!...

இன பேய் பிடித்த இனவாதியே!!
இன்னல் தரும் ஒரு சிலரால் - ஒரு
இனத்தையே தீவிரவாதி என்றாயே!!!!
இன்முகம் காட்டி மீட்டனர் - வெள்ளத்தின்
இன்னலில் மாட்டிய போது.....
இந்த உழைப்பை - நீ
சீதை சென்றாலும் மறவாதே!!!!
சிறு குழந்தையாய் நட்பு பாராட்டு......
அவர்களும் நம் மண்ணவர் தான்........
இன வெறி அகற்றி
இளைஞனை போல் இன்முகம் காட்டு......

ஆட்சிகள் மாறும், அதிகாரமும் மாறும்
தேசமும் மாறும், பகையும் மாறும்
நம் போன்ற இளைஞர்கள் கையில்
நட்புடன் தேசமும் மாறும் -எழுந்து வா
முட்டாளாக்கும் மூடர்கள் முன்
முதுகெலும்புடன் நிமர்ந்து வா!!!!!

மெத்தன அரசியலை களைய
நார்களின் வேஷம் களைந்து
பூக்களின் மணம் பரவ
நாம் திரள்வோம்
நல்லாட்சி மலர - விரைந்து
எழுந்து வா இளைஞனே.....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (9-Dec-15, 11:15 am)
பார்வை : 143

மேலே