நிவாரணத்தின் நிர்வாணங்கள்

செய்திகள் கொய்கின்றன,
கொழுத்தவர்கள் கொக்கரிக்க

கை ஏந்தும் பரிதாபம் கடவுள் இட,
தன்மானக்கப்பல் இங்கே தரை தட்ட,

தன்னார்வ தொண்டு இன்னுமிங்கே தொடர,
தயவு செய்து வழி விடுங்கள்
தயை வேண்டி பல ஜீவன் தாரை தாரையாய்,
தளராது உதவிக்கரம் சாரை சாரையாய்.

அதிகாரம் காட்டி அகங்காரத்தில் மிரட்டாதீர்கள்,
வாய் சொல்லில் வீரர்களே,
ஆண்டவன் பார்க்கிறான்,
அனுபவிக்கப்போகிறீர்கள்,அடங்குங்கள்.

இல்லையேல் ஆட்டம் முடிகையில்
உங்கள் அஸ்திவாரம் கூட தூர் வாரப்படலாம்,
அடுத்த தேர்தலில்.

எழுதியவர் : செல்வமணி (9-Dec-15, 7:34 am)
பார்வை : 224

மேலே