அதீத நம்பிக்கைகளில்

* * * * * * * * * * * * * * * * * * * * * * *

வீழ்வேன்
செவ் அந்திக் கடலில் - தெரிந்தும்
விழிக்கிறது " சூரியன் "
விடியலில்

தேய்வேன்
மூவைந்து இராக்களில் - இருந்தும்
வளர்கிறது "நிலவு "
கருக்கலில்

உருக்குலைவேன் என்று - நினைத்து ம்
ஒரே ஒரு நாள் உலகை
உருட்டுகிறது இருட்டு "அமாவாசை "
திங்கள் ஒரு தடவை

செத்துப் போவேன்
அந்தியில் - ஆனாலும்
பூக்க மறுப்பதில்லை "பூக்கள் "
கோலமிடலில்

புதைத்தலில்
வீழ்ந்து விடுவதில்லை - மறந்தும்
முளைத்தலை "விதைகள் "
மண்ணோடு பேசலில்

இழத்தலில்
இறந்து போவதில்லை - பிரிந்தும்
துளிர்த்தலை "மரங்கள் "
வெட்டித் துண்டாடலில்

ஆர்ப்பரித்து
அழிய விடுவதில்லை - கணத்திலும்
அசைவதை "அலைகள் "
கரை தொடுவதில்

நகர்தலை புறந்தள்ளாதே
நாளைகள் உன்
புலர்தல்கள் " நம்பிக்கை "
அதீதமாக வைப்பதில்

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (9-Dec-15, 6:44 am)
பார்வை : 338

மேலே