அடங்கி அமிழும் ஏக்கத்தில்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அந்த
பவளப் பாறையின்
படிமங்களைப் போல
கவளங்களாய் விழுங்கிய
ஞாபகச்சுவடுகள்
ஆழ்மனவோட்டத்தில்
அஸ்தமித்து நிலை கொண்டுள்ளது

உயிருள்ள கடலொன்றின்
எதிர்நோக்கா
கொந்தளிப்பலைகள் போல்
அவள் உறங்கு நகர
புனைவுகளின் ஏக்கங்கள்
அடங்கி அமிழ்கிறது
அடிக்கடி தரையை முத்தமிட்டு

காலையும் மாலையும்
ஒரே பார்வையால்
கடலையே உமிந்து கொள்ள
முடியும் அவளால் - ஆனால்
தணல் நெருப்பின்
கங்குவளையத்தினால்
பயணம் தகித்துக் கொள்கிறது

திங்களை திமிர் கொண்டு
தலையில் காவி
ஓய்வுறக்கமின்றி
ஒருக்களித்து தவிக்கிறது
முகமிழந்த முகமாக
அடர் இருளின்
ஆளரவமற்ற
வெளியினூடாக நகர்கிறது
அன்னியப்பட்ட
அவளின் மொழியோடு

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (9-Dec-15, 6:03 am)
பார்வை : 156

மேலே