சென்னை மழை வெள்ளம் - 2015-II

நான்கு செல்போன்கள்...
பேச முடியவில்லை.
ஆறு டெபிட்,கிரெடிட் கார்ட்கள்...
உபயோகம் இல்லை.
மூன்று வாகனங்கள்.....
இயக்கும் நிலை இல்லை.
நேற்று வரை வசதி....
இன்று குடிக்க நீர் இல்லை.

கண்கள் விரித்து,தெறித்து பார்த்தும்...
சுற்றிலும் சிறிதும் ஒளியில்லை.
ஓம்கார சப்தத்துடன்...
ஓடியது வீட்டினில் காட்டாறு.

அழும் குழந்தைகள்...
அல்லலுறும் மனைவி...
அவதியில் பெற்றோர்...
செல்ல பிராணிகள்...
எதனையும் தேற்ற தெம்பில்லை.

வேறு எதுவும் வழி இல்லை....
இதற்க்கு மேல் முடிவில்லை...

இயற்கையிடம் சரணடைந்தது மனிதம்....
மனித நேயத்தை பரவ விட்டு விலகியது இயற்கை...

எழுதியவர் : செந்ஜென (9-Dec-15, 1:30 am)
பார்வை : 270

மேலே