தப்பில்லை
குதூகலம் ஊட்ட குழந்தை வீட்டில்
குறும்பு செய்வதில் தப்பில்லை..
நல்லது ஒன்றே நோக்கமாயின்
பொய்யுரைப்பதில் தப்பில்லை..
உதவிசெய்ய உதவுமாயின் காசு
உண்டியல் மறுப்பதில் தப்பில்லை..
சாதி,பேதம் மறையுமாயின்
காதல் திருமணம் தப்பில்லை..
நல்நம்பிக்கை தீபம் ஏற்றுமாயின்
மூட ஜோசியம் தப்பில்லை..
உயர்ந்த உத்தியோகம் செய்தாலென்ன
உண்ண விதைப்பதில் தப்பில்லை..
பிச்சை தவிர்த்து எந்த தொழிலும்
செய்து உயரலாம் தப்பில்லை..
உறவை காக்க தூரம் வாழலாம்
கசப்பை போக்கும் தப்பில்லை..
உழைத்து வாழ வழியின்றி
ஆட்சி எதிர்ப்பதில் தப்பில்லை..
நாட்டை காக்கவும் நல்மனம் வேண்டும்
ஓட்டிருக்கு யோசித்திடு தப்பில்லை..
சட்டம் சங்கடம் தீர்க்கமறுத்தால்
சாந்த போராட்டம் தப்பில்லை..
கல்விக்காக கடனும் வாங்கலாம்
ஒருநாள் காக்கும் தப்பில்லை..
தப்பேயில்லை.. தப்பேயில்லை..
தாய்மொழி மதிக்கும் பிறமொழிக்கல்வி
தயங்காமல் கற்பதில் தப்பேயில்லை..