என்னவள்

குழலின் இசை கேட்டு
வருடிவிடும் தென்றல்
அவள் கூந்தல்..
வண்ணங்கள்
பொறாமை கொள்ளும்
வண்ணம்
அவள் எண்ணம்..
யாருமறியா
புது ராகம் அவள்
குயில்பேச்சு..
காதல் என்ன
அவளைத்தேட
நானும் அவளை நாடித்தான்..
என் ஆயுள்வரை..

எழுதியவர் : தீபாகுமரேசன் (9-Dec-15, 7:57 pm)
Tanglish : ennaval
பார்வை : 165

மேலே