நத்தையின் வேகமாவது வேண்டும் 555

தோழா...
நீ நடந்து சென்றால் பாதம்
நோகுமென்றா...
நகராமல் பாறையின் மேல்
அமர்ந்திருக்கிறாய்...
அங்கே பார்...
அடுத்த நொடியில் யாரேனும்
கால் பட்டால் கூட...
நசுங்கிவிடும் நத்தைகூட
பிழைக்க நகர்ந்துகொண்டே போகிறது...
நீ மட்டும் ஏன்
சோம்பேறியாக...
சிலைபோல் நகராமல் இருந்துகொண்டு
பிறரை குறை சொல்கிறாய்...
நீயும் நகர்ந்துகொண்டே
இரு சிலையாக இல்லாமல்.....