மூடி வைத்த முனகல்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இருள் கவ்வி
கவிழ்கிறது வான் முகடு
இளம் நெஞ்சு
அங்கலாய்க்கிறது மூச்சிரைத்து
ஒவ்வொரு புலர்தல்களும்
அசைகிறது அன்னியமாய்
தாழ்கிறது தராசு
இன்றைய கழிதல்
ஏளனிக்கிறது ஏறிட்டுப் பார்த்து
இருளும் பிந்திய பிறப்பும்
கரைகிறது தடவை தடவையாய்
உற்றுக் கவனித்த பார்வைகள்
உள்ளிளுக்கிறது மூச்சை
உணவு உறக்கம்
உருப்படியற்ற தேவை
படிகளால்
தாழ்கிறது தராசு
பக்குவம் கடந்த பற்றுதல்களின்றி
படுக்கையை நோகிறது பாதங்கள்
கட்டாயக் கடப்புக்களாக
கரைகிறது ஆயுள்கள்
ஆழ் குளத்து நீரில் கரையுண்ட
அணை மண் போல
திறக்கிறது மூடிவைத்த முனகல்கள்
சாளரமின்றி. ...........
- பிரியத்தமிழ் -