அவனாக இருந்து
அல்லது
அவளாக இருந்து
பின்
அவனாகவும்
அவளாகவும் இருந்து
பின்
அவளாக இருந்து
பின்
அவனுக்காக இருந்து
அல்லது
அவனாக இருந்து
பின்
அவளுக்காக இருந்து,
அவர்களின் இருத்தலில்
இல்லாமலே
போய் விட்ட அவள்
அல்லது அவன்,
எங்கேயாவது இருப்பான்
அல்லது இருப்பாள்,
எல்லார் மனதுக்குள்ளும்
குழப்பங்களின் வாழ்வுதனை
மீட்டிய
ஒரு
பிறப்புறுப்பைப்
போல...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (10-Dec-15, 1:19 pm)
பார்வை : 86

மேலே