வெள்ளம் தந்த உள்ளம்
செல்லும் இடம் எல்லாம்...
...அளவில்லா தண்ணீர்.
அதை விட அதிகம்...
...எங்களின் கண்ணீர்.
மூழ்கடிக்க பட்டன...
...பல பகுதிகள்.
நாங்கள் ஆகிவிட்டோம்...
...ஆதரவற்ற அகதிகள்.
ஆக்ரோஷத்தின் உச்சத்தை தொட்டதோ...
...வடகிழக்கு பருவமழை.
யாரால் சொல்ல முடியும்...
...இயற்கையை பிழை.
துயரத்தில் வாடினோம் ...
...இழப்புகள் பல கோடி.
உயரத்திற்கு ஓடினோம்...
...தங்க இடம் தேடி.
நேற்று...
...வீடு நிறைய பணம் வைத்திருந்தான்.
இன்று...
...வயிறு நிறைய வரிசையில் காத்திருந்தான்.
வேதனைகள் அடைந்தோம் ..
...ஆனால் எங்கள் வேகம் அழியவில்லை.
சோதனைகள் கடந்தோம்...
...ஆனால் எங்கள் தைரியம் கரையவில்லை.
வீருகொண்டு எழுந்தோம்...
துன்பங்களை குழி தோண்டி புதைத்தோம்...
கெட்ட அரசியலை உதைத்தோம்...
சாதி மதங்களை மறந்தோம்...
பிற உயிர்களை மதித்தோம்...
அன்பின் வாசலை துறந்தோம்...
புதிய விதிகளை விதைத்தோம்...
மொத்தத்தில்...
நாம் மனிதர் என்பதை உணர்ந்தோம்...
வந்ததோ வெள்ளம்!!!
தந்ததோ நல்ல உள்ளம்!!!