தூரிகையின் ஏக்கம்
எழுதப்படாத கவிதைகள் பல
என் தூரிகையின் கூர் முனையில்
பிரசவிக்க வரிசையில்
கருத்துப் பொதியாய்...
அவை சுகமாக ஜனனித்து
கவி உலகை வென்றிடுமோ....?
கனவுக்குள் புதைந்திடுமோ.....?
காலம் தான் சொல்லும் பதில் !
கவிதாயினி அமுதா பொற்கொடி