உறக்கத்துடன் கண்ணாம்மூச்சி
மிரட்டுகிறது வேலை.....
விரட்டுகிறது நேரம்....
ஓடிக் களைத்து
இமை மூடி சாய்ந்தால்.....
காத்திருக்கும் கடமைகள்
கருத்தை முழுதாய் களவாடுகிறது...
இடைவிடாது எதிர்வரும் சவால்கள்
விடை தெரியா கேள்விகளாகி ...,,
உறக்கத்துடன் கண்ணாம்மூச்சி ஆடுகின்றன.....
கண்ணயர்ந்தால் சற்று
கனவுகளுக்குள் புதைத்து
இளைப்பாறலாம்...
புதிரான பல கேள்விகளுக்கும்
விடை காணலாம்...
இன்றேனும் என்னைத் தழுவிடு
நித்திரைத் தாயே...
கவிதாயினி அமுதா பொற்கொடி